நியூஸிலாந்து றக்பி அணியின் வெற்றித் தலைவர் ரிச்சி மெக் கோ றக்பியிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார்.
34 வயதான ரிச்சி மெக்கோ இதுவரை ஆடிய 148 போட்டிகளில் 131 இல் வெற்றிபெற்றுள்ளார். அதேவேளை நியூஸிலாந்து அணி இரண்டு உலகக் கிண்ண இறுதிப்போட்டிகளில் வெற்றிபெற்றமைகூட இவரின் தலைமைத்துவத்தில் என்பது குறிப்பிடத்தக்கது.
2011ஆம் ஆண்டு மற்றும் 2015ஆம் ஆண்டுக்கான றக்பி உலகக் கிண்ண இறுதிப்போட்டியில் அவுஸ்திரேலியாவை வீழ்த்திய மெக்கோ தலைமையிலான நியூஸிலாந்து அணி கிண்ணத்தை சுவீகரித்துக்கொண்டது.
அதேவேளை ரிச்சி மெக் கோ தொடர்ந்து மூன்று தடவைகள் உலக வீரருக்கான விருதையும் பெற்று சாதனை படைத்திருக்கிறார். றக்பியிலிருந்து தான் ஓய்வுபெறுவது குறித்து மெக்கோ கூறும்போது,
நான் இதை செய்ய சரியான தருணம் இதுவென நினைக்கிறேன் என்றார். ரிச்சி மெக்கோ இதுவரை 110 போட்டிகளுக்கு தலைவராக செயற்பட்டிருக்கிறார். இது அவருடைய சாதனைகளில் ஒன்று. மெக்கோவின் ஓய்வை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின்போது, நேற்றுமுன்தினம் உயிரிழந்த நியூஸிலாந்து றக்பி அணியின் முன்னாள் வீரர் லொமுவுக்கு ஒரு நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM