(எம்.எம். சில்வெஸ்டர்)

கொழும்பு ரோயல் கல்லூரி ஆலோசக மற்றும் முகாமைத்துவ குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மேல் மாகாண அழைப்பு பாடசாலைகளுக்கிடையிலான கரப்பந்தாட்டப் போட்டித் தொடர் எதிர்வரும் 9 ஆம் 10 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.

12 ஆவது தடவையாகவும் நடைபெறும் இந்த கரப்பந்தாட்டப் போட்டித் தொடரானது, கொழும்பு ரோயல் கல்லூரி மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

கல்லூரியின் பழைய மாணவர்கள் சங்கத்தின் அனுசரணையுடன் நடைபெறும் இத்தொடரின், முதற்போட்டி 9 ஆம் திகதி காலை 8.30 மணிக்கு ஆரம்பமாவதுடன், அரையிறுதிப்போட்டிகள் மற்றும் இறுதிப் போட்டிகள் 10 ஆம் திகதி காலை 10.30 மணிக்கு ஆரம்பமாகும்.

இப்போட்டித் தொடரில், ஆண்களுக்கான  14 வயதின் கீழ் , 16 வயதின் கீழ், 18 வயதின் கீழ், 20 வயதின் கீழ் என 4 பிரிவுகளிலும், பெண்கள் பிரிவில் 19 வயதின் கீழ் பிரிவு மாத்திரேமே இடம்பெறவுள்ளன.