களனி பல்கலைக்கழகத்தில் தாபிக்கப்படவுள்ள சிறுநீரக நோய் தொடர்பான தகவல் மற்றும் ஆய்வு நிலையம் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி  மைத்ரிபால சிறிசேன முன்னிலையில் கைச்சாத்திடப்பட்டது. 

சிறுநீரக நோய் தடுப்பு ஜனாதிபதி செயலணியின் பணிப்பாளர் அசேல இத்தவெல மற்றும் களனி பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் டி.எம்.சமரசிங்ஹ ஆகியோர் இவ் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.

களனி பல்கலைக்கழகத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ள சிறுநீரக நோய் தொடர்பான ஆய்வு நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கும் பரப்புதல், சிறுநீரக நோய்க்கான காரணத்தை கண்டறிவதற்கான ஆய்வுகளை மேற்கொள்ளுதல், ஏனைய தேசிய மற்றும் சர்வதேச தரப்பினருடன் இணைந்து குறித்த ஆய்வுத் தகவல்களை பரிமாறிக்கொள்ளுதல், சிறுநீரக நோயை தவிர்ப்பதற்கு தேவையான கொள்கைகள் திட்டங்களுக்கான பரிந்துரைகளை வழங்குதல் இந்த மத்திய நிலையத்தினால் மேற்கொள்ளப்பட எதிர்பார்க்கப்படுகின்றது. 

மேல் மாகாண வர்த்தக தொலைபேசி விபரக்கொத்தின் முதலாவது பிரதி ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.

2018 - 2019ஆம் ஆண்டிற்கான SLT வருடாந்தம் வெளியிடும் மேல் மாகாண வர்த்தக தொலைபேசி விபரக்கொத்தின் முதலாவது பிரதி இன்று  முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்டது.

ஸ்ரீ லங்கா டெலிகொம் நிறுவனத்தின் தலைவர் குமாரசிங்க சிறிசேனவினால் அப்பிரதி ஜனாதிபதி யிடம் வழங்கி வைக்கப்பட்டது. SLT rainbow pages நிறுவனத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரி மல்ராஜ் வலப்பிட்டியவும் இதன்போது பிரசன்னமாகியிருந்தார்.

SLT rainbow pages தொலைபேசி விபரக்கொத்தில் அரசாங்க தகவல்கள், சமய நிறுவனங்களின் தகவல்கள் சுமார் 1300 பேர்களின் கீழ் வகைப்படுத்தப்பட்ட பொருட்கள் மற்றும் சேவைகள் பட்டியல்படுத்தப்பட்டுள்ளதுடன், அச்சிடப்பட்டுள்ள விபரக் கொத்துக்கு மேலதிகமாக rainbowpages.lk இணையத்தளம், கைத்தொலைபேசி, மென்பொருள் இருவட்டு போன்ற பல்வேறு நவீன தொழில்நுட்ப முறைமைகளின் கீழ் வாடிக்கையாளர்களுக்கு தகவல்களை பெற்றுக்கொள்வதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. 

ஜனாதிபதி மாளிகையில் இரத்ததான முகாம்

ஜனாதிபதி அலுவலக பணிக்குழாம் அலுவலர்களின் பங்குபற்றுதலுடன் ஏற்பாடு செய்யப்பட்ட இரத்ததான முகாம் இன்று முற்பகல் கொழும்பு கோட்டை ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது. 

ஜனாதிபதி மாளிகையில் இரத்ததான முகாம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது இதுவே முதற் தடவையாகும்.