தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளரும்  ஊடகவியலாளருமான ஹேம நளின் கருணாரத்ன தனது 55 ஆவது வயதில் காலமானார்.

இவர் திடீர் மாரடைப்பு காரணமாக மாலபேயிலுள்ள தனது வீட்டில் இருக்கும் போது உயிரிழந்துள்ளார்.

தொலைக்காட்சித் துறையில் 25 வருட கால அனுபவத்தைக்கொண்டுள்ள நளின் கருணாரத்ன, ரூபவானி கூட்டுத்தாபனம், சுவர்ணவாஹினி போன்ற தொலைக்காட்சி சேவைகளில் கடமையாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.