முஸ்லிம்களுக்கு எதிரான அநீதிகள்  என்னை மீறியே இடம்பெற்றன   :மஹிந்த 

Published By: MD.Lucias

21 Feb, 2016 | 05:50 PM
image

(எம்.ஆர்.எம்.வஸீம்)

நான் இனவாதியல்ல. என்னை முஸ்லிம்களிடமிருந்து தூரப்படுத்துவதற்கு சதித்திட்டங்கள் இடம்பெறுகின்றன. இச்சந்தர்ப்பத்தில் முஸ்லிம்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதியும் குருணாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக் ஷ தெரிவித்தார்.

எனது ஆட்சியில் முஸ்லிம்களுக்கு இடம்பெற்ற அநீதிகளுக்கு நான் பொறுப்பில்லை. என்னுடைய ஆட்சியில் முஸ்லிம்களுக்கு இடம் பெற்றதாக கூறப்படும் அநீதிகள் என்னை மீறி நடைபெற்றவையாகும் எனவும் அவர் குறிப்பிட்டார்.  

முன்னாள் ஜனாதிபதியும் குருணாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ்வுக்கும் முஸ்லிம் மக்களுக்கும் இடையில்   வெள்ளிக்கிழமை இரவு  மல்வானை உலஹிட்டிவலயில் சந்திப்பொன்று இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.  

அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,

என்மீது இனவாத முத்திரை குத்தி எனக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் நிலவிய நல்லுறவை சீர்குலைக்க சதித்திட்டங்கள் இடம்பெறுகின்றன. இதற்கு சர்வதேசமும் உதவியுள்ளது. முஸ்லிம்களுடன் நான் ஆரம்பகாலம் முதல் நல்லுறவை பேணிவந்துள்ளேன். 

சர்வதேசம் என்னை முஸ்லிம்களிடமிருந்து பிரிப்பதற்கு முன்பு எனக்கும் முஸ்லிம்களுக்கு இடையில் பலமான உறவுப் பாலம் அமைந்திருந்தது. எனது ஆட்சிக் காலத்திலேயே முஸ்லிம்களுக்கு பலமான அரசியல் அங்கீகாரம் வழங்கப்பட்டது. முஸ்லிம்கள் பலர் பாராளுமன்ற உறுப்பினர்களாகவும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களாகவும் நியமனம் பெற்றார்கள். என்றாலும் சர்வதேசம் நான் முஸ்லிம்களுக்கு எதிரானவன் என இனவாத முத்திரை குத்தி தனது காரியத்தைச் சாதித்துக் கொண்டது.

 என்னிடமிருந்து ஆட்சியைக் கைப்பற்றி சர்வதேசத்துக்கு சார்பான ஆட்சியாளர்களிடம் அதனைக் கையளிப்பதற்கு சர்வதேசம் வகுத்த திட்டமே இதுவாகும். இந்த சதித்திட்டத்தில் சர்வதேசம் வெற்றி பெற்றுக் கொண்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01