கவுதம் மேனன் இயக்கத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பில் விக்ரம், பார்த்திபன், ரிது வர்மா, ராதிகா, சிம்ரன், ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் பலர் நடிக்கும் படம் 'துருவ நட்சத்திரம்'. 

நீண்ட காலமாக படத் தயாரிப்பில் இருக்கும் இப்படத்தின் டீசர் சற்றுமுன் திடீரென வெளியிடப்பட்டது. 

இந்த டீசர் இணையதளங்களில் லீக் ஆனதைத் தொடர்ந்து டீசரை திடீரென வெளியிட்டுவிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சில தினங்களுக்கு முன்புதான் விக்ரம் நடிக்கும் மற்றொரு படமான 'சாமி ஸ்கொயர்' படத்தின் டிரைலர் வெளியானது. 

அந்த டிரைலருக்கு கடும் விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் அந்த மாஸ் படத்திற்கு போட்டியாக கிளாஸ் படமான 'துருவ நட்சத்திரம்' டீசரை வெளியிட்டு விக்ரம் இமேஜை பாதுகாத்துள்ளனர்.

கடந்த சில வருடங்களாகத் தயாரிப்பில் இருக்கும் இப்படத்தை ஆரம்பிப்பதற்கு முன்பே ஒரு டீசரை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்கள். 

அதன் பின் ஒரு வருடத்திற்கு முன்பு அடுத்தடுத்து இரண்டு டீசர்களை வெளியிட்டார்கள். இப்போது மூன்றாவதாக ஒரு புதிய டீசர் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.