2018 இல் ஜன­வரி முதல் மார்ச் வரை­யான காலப்­ப­கு­தியில் இலங்­கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பய­ணி­க­ளினால் 1313 மில்­லியன் டொலர் வரு­மா­ன­மாக கிடைத்­துள்­ளது. அதேவேளை இவ் ­வ­ருடம் மார்ச் மாதத்தில் மட்டும் உல்­லாச பய­ண­ து­றை­யினால் 433 மில்­லியன் டொலர் வரு­மா­ன­மாக கிடைக்க பெற்­றுள்­ளது.

சுற்றுலாப் பய­ணி­களின் வருகை மார்ச் மாதத்தில் 24.1 சத­வீ­தத்தால் அதி­க­ரித்­துள்­ளது. இந்­தியா, பிரிட்டன் மற்றும் ஜேர்­மனி ஆகிய நாடு­களில் இருந்தே அதி­க­ள­வான சுற்றுலாப் பய­ணிகள் இலங்­கைக்கு வருகை தந்­துள்­ளனர்.

2018 இல் முதல் காலாண்டில் 707924 உல்­லாசப் பய­ணிகள் இலங்­கைக்கு வருகை தந்­துள்­ளனர். இது 2017 உடன் ஒப்­பி­டு­கையில் 17% அதி­க­ரிப்­பாகும். அதே வேளை வெளி­நாட்டில் உள்ள இலங்கை தொழி­லா­ளர்­க­ளினால் மார்ச் மாதம் 678 மில்­லியன் டொலர் பணம் இலங்­கைக்கு அனுப்பப்பட்டுள்ளது. 2017 இல் இத் தொகை 643 மில்லியன் டொலராக காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.