முதன்முறையாக நடத்தப்படும் ‘ஒலிம்பியன்ஸ் ரன்’  

Published By: Daya

05 Jun, 2018 | 01:02 PM
image

 (எம்.எம். சில்வெஸ்டர்)

சர்வதேச ஒலிம்பிக் தினத்தை முன்னிட்டு  ஸ்ரீ லங்கா ஒலிம்பியன்ஸ் சங்கத்தினால் ஏற்பாடு செய்துள்ள ‘ஒலிம்பியன்ஸ் ரன்’ நட்பு ரீதியிலான ஓட்டம் எதிர்வரும் 22 ஆம் திகதி கண்டி போகம்பரை மைதானத்தில் காலை 8.30 மணிக்கு ஆரம்பமாகி முற்பகல் 11.30 மணிக்கு கெடம்பே மைதானத்தில் நிறைவடையவுள்ளது.

பாடசாலை மாணவர்கள் 1000 பேர், பல்கலைக்கழக மாணவர்கள் 300 பேர், இளைஞர் அமைப்புக்களின் அங்கத்தினர்கள் 200 பேர் என 1500 இற்றும் மெணுபடடோர் இந்த ‘ஒலிம்பியன்ஸ் ரன்’ நட்பு ரீதியிலான ஓட்டத்தில் பங்கேற்கின்றனர்.

ஸ்ரீ லங்கா ஒலிம்பியன்ஸ் சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள  ஒலிம்பியன்ஸ் ரன் குறித்து ஊடகங்களுக்கு தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பு கொழும்பு என்.சீ.சீ. விளையாட்டுக் கழக கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்றது.

இதன்போது கருத்து தெரிவித்த ஸ்ரீ லங்கா ஒலிம்பியன்ஸ் சங்கத்தின் தலைவர் ஸ்ரீயானி குலவன்ச,

“எமது சங்கம் 2017 ஆம் ஆண்டு ஜூலை  15 ஆம் திகதியன்று ஆரம்பிக்கப்பட்டது. ஆகவே எமது  சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள முதலாவது ஒலிம்பியன்ஸ் ரன் இதுவாகும். இதனை வெற்றிகரமாக செய்வதற்கு நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம்.

சர்வதேச ஒலிம்பிக் தினத்தை முன்னிட்டு  ஸ்ரீ லங்கா ஒலிம்பியன்ஸ் சங்கத்தினால் ஏற்பாடு செய்துள்ள ‘ஒலிம்பியன்ஸ் ரன்’ நட்பு ரீதியிலான ஓட்டம் எதிர்வரும் 22 ஆம் திகதி கண்டி போகம்பரை மைதானத்தில் காலை 8.30 மணிக்கு ஆரம்பமாகி முற்பகல் 11.30 மணிக்கு கெடம்பே மைதானத்தில் நிறைடையும்.

எமது சங்கத்தில் நிதிப்பற்றாகுறை நிலவுகின்ற போதிலும், வயோதிப நிலையிலுள்ள முன்னாள் விளையாட்டு வீர வீராங்கனைகளுக்கு வைத்திய வசதிகள் உள்ளிட்ட எம்மாலான சிறு சிறு உதவிகளை செய்து வருகிறோம்.

போதிய நிதியின்மையால் இயங்கி வரும் எமக்கு நெஸ்ட்லே லங்கா மற்றும் ஆசிரி வைத்தியாசாலை ஆகிய நிறுனங்கள் எமக்கு அனுசரணை வழங்குகின்றன என தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

18ஆவது IPL அத்தியாயத்தின் ஆரம்பப் போட்டியில்...

2025-03-23 10:26:39
news-image

உலக உள்ளக சம்பியன்ஷிப் 60 மீற்றர்...

2025-03-22 04:00:36
news-image

இலங்கையில் நடைபெறவுள்ள தொடர் ஓட்டப் போட்டிக்கு...

2025-03-22 04:54:39
news-image

உலக உள்ளக அரங்க சம்பியன்ஷிப்பில் இத்தாலி...

2025-03-21 18:32:55
news-image

லாஓசை 22 வருடங்களுக்குப் பின்னர் வீழ்த்திய...

2025-03-21 21:12:57
news-image

ஒலிம்பிக் ஸ்தாபனத்தை கண்ணியத்துடன், பெருமையுடன் வழிநடத்துவதாக...

2025-03-21 15:13:08
news-image

அணிக்கு 6 பேர் கொண்ட “...

2025-03-21 14:47:13
news-image

சர்வதேச ஒலிம்பிக் குழுவின் புதிய தலைவராக...

2025-03-21 11:32:11
news-image

கோடிக்கணக்கான பணப்பரிசுக்கு குறிவைத்து ஐபிஎல் கிரிக்கெட்டில்...

2025-03-20 12:42:06
news-image

சர்வதேச ஒலிம்பிக் குழு தலைவர் தெரிவு...

2025-03-20 10:37:03
news-image

பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே வெளியிட்ட...

2025-03-20 02:56:03
news-image

இண்டியன் பிரீமியர் லீக் 2025இல் இலங்கை...

2025-03-19 20:05:18