மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அல்விஸ் குளப்பகுதியில் புதையல் தோண்டிய மின்சாரசபை உத்தியோகத்தர் உட்பட நால்வரை எதிர்வரும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

 

கடந்த ஞாயிற்றுக்கிழமை புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வேளை பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற இரகசியத் தகவலுக்கு இணங்கவே குறித்த பகுதிக்கு சென்ற பொலிஸார் இவர்களை கைதுசெய்ததுடன் புதையல் தோண்டுவதற்கு பயன்படுத்திய உபகரணங்களையும் கைப்பற்றியுள்ளனர்.