வவுனியா, ஓமந்தைப் பகுதியில் கடத்தப்பட்ட பெறுமதியான முதிரை மரக்குற்றிகளை ஓமந்தைப் பொலிஸார் மீட்டுள்ளனர்.

இன்று காலை குறித்த முதிரை மரக்குற்றிகள் ஓமந்தை, நொச்சிமோட்டை, சின்னக்குளம் வீதியில் வைத்து கைப்பற்றப்பட்டுள்ளது.

ஓமந்தைப் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து ஓமந்தை, நொச்சிமோட்டை, சின்னக்குளம் பகுதியில் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்  டபிள்யூ.ஜே.எஸ். பொன்சேகா அவர்களின் வழிகாட்டலில் ஓமந்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சுரேஸ் டி சில்வா தலைமையிலான பொலிஸ் குழுவினர் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின் போதே சிறியரக பிக்கப் வாகனம் ஒன்றில் ஏற்பட்ட 10 முதிரை மரக்குற்றிகள் கைப்பற்றப்பட்டன.

குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் பொலிஸாரின் வருகையையடுத்து அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். இது குறித்து ஓமந்தை பொலிஸார் மேலதிக விசாரரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.