பிணைமுறி மோசடி விவகாரம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையின் சீ-350 முதல் சீ-360  வரையான பகுதிகளை  ஜனாதிபதியின் செயலாளர் சபாநாயகரிடம் கையளித்தார்.

மத்திய வங்கி பிணைமுறி மோசடியுடன்  தொடர்புப்பட்ட அர்ஜுன் அலோசியஸிடம் இருந்து பணம் பெற்ற 118 பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களை வெளியிட வேண்டும் என்று எழுந்துள்ள சர்ச்சையை அடுத்தே இந்த அறிக்கையின் மேற்படி பகுதிகளை ஜனாதிபதியன் செயலாளர் ஒஸ்டின் பெர்ணான்டோ சபாநாயகர் கருஜயசூரியவிடம் இன்று காலை கையளித்தார்.