ஐரோப்பிய ஒன்றியத்தை பிளவுபடுத்தும் எண்ணம் எமக்கு ஒருபோதும் இருந்ததில்லை என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தெரிவித்துள்ளார். 

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் ஒன்றான ஆஸ்திரியாவுக்கு இன்று உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ள நிலையில் ரஷ்யாவின் தலைநகர் மோஸ்கோவில் ஊடகவியலாளர்களை நேற்று சந்தித்து கருத்து வெளியிடும் போதே புட்டின் மேற்கண்டவாறு கூறினார்.  

அவர் அங்கு மேலும் கூறியுள்ளதாவது, 

ஐரோப்பிய ஒன்றியமானது ரஷ்யா பொருளாதாரத்தில் சிறந்த பங்காளியாகும். எனவே ஐரேப்பிய ஒன்றியத்தை பிளவுபடுத்தும் நோக்கம் எமக்கு ஒருபோதும் இருந்ததில்லை என்றார்.