சர்வதேச அளவில் அதிக கோல்களை அடித்த வீரர்களின் பட்டியலில் மூன்றாமிடத்தில் இருந்து வந்த டேவிட் வில்லாவை பின்னுக்குத் தள்ளி, இந்திய கால்பந்தாட்ட அணித் தலைவர் சுனில் சேத்ரி மூன்றாவது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
இந்தியாவில் நடைபெற்றுவரும் 'இன்டர்கான்டினன்டல்' (கண்டங்களுக்கு இடையிலான) கால்பந்தாட்ட தொடரில் மும்பையில் நேற்று நடைபெற்ற போட்டியில் இந்தியா, கென்னியா அணிகள் மோதின.
இப்போட்டியில் சுனில் சேத்ரி (68, 90+2வது நிமிடம்) இரண்டு கோல் அடித்து கைகொடுக்க, இந்திய அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
இதன் மூலம் சர்வதேச அளவில் அதிக கோல்களை போட்ட தற்போதைய கால்பந்து வீரர்கள் பட்டியலில், 59 கோல்களை இதுவரை போட்டு மூன்றாமிடத்திலிருந்து வந்த டேவிட் வில்லாவை பின்னுக்குத் தள்ளி, இந்திய கால்பந்தாட்ட அணி வீரரும் தலைவருமான சுனில் சேத்ரி 61 கோல்களை அடித்து மூன்றாவது இடத்துக்கு முன்னேறினார்.
இப் பட்டியலில் போர்த்துக்கள் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ 81 கோல்களை போட்டு முதலிடத்திலும் ஆர்ஜெண்டினாவின் லயோனல் மெஸ்சி 64 கோல்களையும் போட்டு இரண்டாவது இடத்திலும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM