பங்களாதேஷ் - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையில் நடைபெற்ற போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 45 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இவ்விரு அணிகளுக்குமிடையிலான மூன்று போட்டிகளை கொண்ட ரி-20தொடரின் முதல் போட்டி உத்தரகாண்ட் தலைநகர் டேராடூனில் நடைபெற்றது.
இந்தப் போட்டியில் முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 167 ஓட்டங்களை எடுத்தது. ஷேசாத் 40, சமினுல்லா 36 ஓட்டங்களை விளாசினர்.
167 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் 19 ஓவர்களில் 122 ஓட்டங்களுக்கு சுருண்டது.
இதனால் ஆப்கானிஸ்தான் 45 ஓட்டங்களால் அபார வெற்றி பெற்றது.
ஆப்கானிஸ்தானின் நட்சத்திர வீரர் ரஷீத்கான் 13 ஓட்டங்களைக் கொடுத்து 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார். இதேபோல ஷபூர் சர்தான் 3 விக்கெட்டுக்களையும் முஹமது 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM