முல்லைத்தீவு – முள்ளியவளை மதவாளசிங்கன் குளத்தில் நீரில் மூழ்கி உயிரிழந்த நபெராருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

முள்ளியவளை முதலாம் வட்டாரம் பகுதியை சேர்ந்த இந்திரன் தகீசன் என்ற 21 வயது இளைஞரே நேற்று இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

குறித்த இளைஞன் தனது நண்பர்களுடன் கடந்த 3 ஆம் திகதி மாலை குளத்தில் நீராட சென்றுள்ள நிலையில், நீரில் மூழ்கி காணால் போனதாக அவரது நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.

மூன்றாம் திகதி மாலை முதல்  குறித்த இளைஞனை தேடும் பணிகள் இடம்பெற்றிருந்த நிலையில், நேற்று பிற்பகல் குறித்த இளைஞரின் சடலம் குளத்திலிருந்து மீட்கப்பட்டுள்ளது.

சடலம் தொடர்பான பிரேத பரிசோதனை முல்லைத்தீவு வைத்தியசாலையில் இடம்பெறவுள்ளதோடு,

குறித்த சம்பவம் தொடர்பா மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.