(எம்.எப்.எம்.பஸீர்)

நீதி­மன்றை அவ­ம­தித்­த­தாக குற்றம் சுமத்­தப்­பட்­டுள்ள  பிரதி அமைச்சர் ரஞ்சன் ராம­நா­யக்க வெளி­யிட்­ட­தாக கூறப்­படும் கருத்துக்கள் அடங்­கிய காணொ­ளியை மேலோட்­ட­மாக பார்க்கும் போதே அது நீதி­மன்றை அவ­ம­திக்கும் வகையில் உள்­ளதை அவதானிக்க முடி­வ­தாக  சட்ட மா அதிபர் தனது நிலைப்­பாட்டை நேற்று உயர் நீதி­மன்­றுக்கு அறி­வித்தார். 

முன்­ன­தாக ரஞ்சன் ராம­நா­யக்­க­வுக்கு எதி­ரான இந்த நீதி­மன்ற அவமதிப்பு வழக்கை   மாகல்­கந்த சுதந்த  தேரர் மற்றும் ஓய்வு பெற்ற விமா­னப்­படை அதி­காரி  சுனில் குமார ஆகியோர்  தாக்கல் செய்­தி­ருந்­தனர்.

அம் மனுவில் கடந்த ஆகஸ்ட் 21ஆம் திகதி ஊட­கங்­க­ளிடம் கருத்து வெளி­யிட்ட ரஞ்சன் ராம­நா­யக்க, இந்த நாட்டில் பெரும்­பா­லான சட்டத்த­ர­ணிகள், நீதி­ப­திகள்  ஊழல்­வா­திகள் என குறிப்பிட்டுள்ளதாகவும், பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஒருவர் இவ்­வாறு கூறி­ய­மை­யா­னது, மக்­க­ளுக்கு சட்டம் தொடர்பில் இருக்கும் நம்பிக்கையை சீர்­கு­லைக்க வாய்ப்­புள்­ள­தா­கவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதனால், நீதி­மன்­றத்­திற்கு அபகீர்த்தி ஏற்பட்டுள்ளதாகவும் மனுதாரர்கள் கூறியுள்ளனர்.

குறித்த கருத்­துக்­களின் உள்­ள­டக்கம் நீதி­மன்றை அவ­ம­திக்கும் வகையில் அமைந்­தி­ருப்­ப­தாக சட்ட மா அதிபர்  தனது நிலைப்­பாட்டை மேல­திக சொலி­சிட்டர் ஜெனரால்  பிரி­யந்த நாவான ஊடாக நீதி­மன்­றுக்கு அறி­வித்தார்.

அதனால் இந்த வழக்கை தொடர்ந்து முன்­னெ­டுத்து விசா­ரிக்க வேண்டும் என மேல­திக சொலி­சிட்டர் ஜெனரால் பிரி­யந்த நாவான நீதி­மன்­றிடம் கோரினார்.  நீதி­யர்­சர்­க­ளான ஈவா வண­சுந்­தர,  எல்.டி.பி. தெஹி­தெ­னிய  ஆகியோர் முன்­னி­லையில் குறித்த வழக்கு நேற்று விசா­ர­ணைக்கு வந்த போதே  சட்ட மா அதி­பரின் நிலைப்பாட்டை மேல­திக சொலி­சிட்டர் ஜெனரால் உயர் நீதி­மன்றில் பிரஸ்­தா­பித்தார்.

 இந் நிலையில் இது குறித்த வழக்கை எதிர்­வரும் ஜூலை 18 ஆம் திக­திக்கு ஒத்தி வைத்த நீதி­மன்றம், இந்த வழக்கு தொடர்பில்  உரிய நட­வ­டிக்கை எடுக்க மனுவை பிர­தம நீதி­ய­ர­ச­ரிடம் ஒப்படைத்ததாகவும் அறி­வித்­தது.