காட்டுக்கு விறகு பொறுக்க சென்ற குடும்பப் பெண் மீது கரும் குளவிகள் தாக்கியதில் 3 பிள்ளைகளின் தாய் பரிதாபகரமான முறையில் மரணத்தை தழுவிக்கொண்டுள்ளார்.

அராலி தெற்கு வட்டுக்கோட்டையைச் சேர்ந்த சாந்த லிங்கம் பிறேமா (50) என்பவரே யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பயனளிக்காத நிலையில் மரணத்தை தழுவிக்கொண்டுள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை மாலையில் குளவிகள் தாக்கியதாகவும் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கத போதிலும் நேற்று மரணத்தை தழுவிக்கொண்டுள்ளார்.

நீதிமன்ற பணிப்புரைக்க அமைவாக மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம் குமாரினால் மேற்கொள்ளப்பட்ட மரண விசாரணையைத் தொடர்ந்து சடலம் கணவரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

- நவம்