(என்.ஜி.இராதகிருஷ்ணன்)

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இரண்டு கிலோமீற்றர் தூரம் வரை சைக்கிள் ஓட்டி சென்றவர் நெடுஞ்சாலைப் போக்குவரத்து பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக E-01 நெடுஞ்சாலை பிரதிப் பணிப்பாளர் ஆர்.ஏ.டி.கஹதபிட்டிய தெரிவித்தார்.

களனிகம அதிவேக நெடுஞ்சாலையின் நுழைவாயில் வழியாக நுழைந்து தொடங்கொட செல்ல முற்பட்ட போதே இவரை கைது செய்த நெடுஞ்சாலை போக்குவரத்து பிரிவினர் இவரை பண்டாரகம பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

மேலும் குறித்த இச் சந்தேக நபரை பொலிஸார் பிணையில் விடுவித்தனர்.