புதிய மோட்டார் வாகனங்களின் பதிவுகள் கணிசமான அளவு அதிகரித்துள்ளதாக ஜே.பி.செக்கியுரிட்டி லிமிட்டட் ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

குறித்த வாகனங்களின் பதிவுகள் கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து அதிகரித்துள்ளதாகவும், ஏப்ரல் மாதத்தில் கூடுதலான விடுமுறை தினங்கள் காணப்பட்டதனால், எதிர்ப்பார்த்த அதிகரிப்பு காணப்படவில்லையெனவும் ஜே.பி.செக்கியுரிட்டி லிமிட்டட் ஸ்தாபனம் மேலும் தெரிவித்துள்ளது.

இருப்பினும், மோட்டார் வாகனங்களின் வெவ்வேறு வகை வாகன பதிவுகள் கணிசமான அளவு அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.