இலங்கையில் சர்வதேச உதைபந்தாட்டப் போட்டியொன்றை நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படடுள்ளது.

அந்தவகையில் குறித்த சர்வதேச உதைபந்தாட்டப் போட்யை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

சிங்கப்பூர், மலேசியா, மற்றும் மாலைதீவு அணிகள் இப் போட்டியில் பங்கேற்கவுள்ளதாக இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் அனுர டீ சில்வா தெரிவித்தார்.

இலங்கை மற்றும் லிதுவேனியா அணிகளுக்கு இடையிலான ஒரு போட்டி அடுத்த மாதம் ஆரம்பப் பகுதியில் கொழும்பில் இடம்பெறவுள்ளது.

அதன் பின்னர் ஜப்பான் அணியுடனான ஒரு போட்டியில் இலங்கை அணி ஜப்பானில் மோதவுள்ளது. 

இந்த வருடம் இலங்கை உதைபந்தாட்ட அணி மேலும் பல சர்வதேச போட்டிகளில் பங்கேற்கவுள்ளதாக இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் அனுர டீ சில்வா மேலும் தெரிவித்தார்.