சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் தயாராகவிருக்கும் படத்தில் இளம் நடிகை மேகா ஆகாசும், இளம் நடிகர் வைபவ்வும் லேட்டஸ்ட்டாக இணைந்திருக்கிறார்கள் என்று செய்தி வெளியாகியுள்ளது.

கௌதம் வாசுதேவ் இயக்கத்தில்  உருவாகிக் கொண்டிருக்கும் ‘என்னை நோக்கி பாயும் தோட்டா ’ படத்தில் தனுசுக்கு ஜோடியாக நடிக்கிறார் நடிகை மேகா ஆகாஷ். இவர் ஏற்கனவே ‘ஒரு பக்க கதை’ என்ற படத்தில் நடித்திருக்கிறார். 

ஆனால் அந்த படம் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நடிகர் தனுசின் பரிந்துரையின் பேரில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கவிருக்கும் ரஜினியின் படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார் மேகா ஆகாஷ்.

அதேபோல் மற்றொரு முக்கியமான கேரக்டரில் நடிக்க நடிகர் வைபவ்வும் ஒப்பந்தமாகியிருக்கிறார். இதைப் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.