கர்ப்ப காலத்தின் போது அனிமீயாவால் பாதிக்கப்படும் பெண்களின் எண்ணிக்கை 48 சதவீதமாக உயர்ந்திருப்பதாக மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கிறது. 

இந்த எண்ணிக்கை கினியா மற்றும் நைஜீரியா போன்ற ஆப்பிரிகா நாடுகளில் உள்ள பெண்கள் எதிர்கொள்ளும் அளவை விட அதிகம் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் பேறு காலத்தின் போது பெண்கள், இரும்பு சத்து பற்றாகுறை, ஃபோலேட் பற்றாகுறை மற்றும் விற்றமின் பி 12 பற்றாக்குறை மூன்று வகையினதான அனிமீயாவால் பாதிக்கப்படுகிறார்கள். இதனை அவர்கள் முன்கூட்டியே கண்டறிந்து சிகிச்சை பெற்றால் தாயும் சேயும் நலமுடன் இருப்பார்கள்.

அனிமீயாவால் பாதிக்கப்பட்டவர்களின் செல்கள், உடலுக்கு தேவையான ஒக்ஸிஜனை எடுத்து செல்வதில் தடையும், இடையூறும் ஏற்படுகிறது. சிசு வயிற்றில் இருக்கும் போது இந்நிலை ஏற்பட்டால் குழந்தைக்கு தேவையான இரத்தமும், சத்தும் கிடைக்காத சூழல் ஏற்படக்கூடும். 

வெளிறிய தோல், நகம் மற்றும் உதடுகள் வெடிப்பு, சோர்வு, மயக்கம், சீரற்ற இதயத்துடிப்பு, மூச்சுத்திணறல் போன்றவைகளை அறிகுறிகளாக எடுத்துக்கொள்ளலாம். இதன்போது மருத்துவர்களைச் சந்தித்து என்ன வகையான அனிமீயாவால் பாதிக்கப்பட்டிருக்கிறோம் என்பதை கண்டறிந்து அதற்கேற்ற வகையில் ஊட்டச்சத்தினைச் சாப்பிட்டு இதனை குணப்படுத்திக் கொள்ளலாம். விற்றமின் சி, காய்கறிகள், பழங்கள் போன்றவைகளையும் சாப்பிடவேண்டும்.

டொக்டர் நஸ்ரின்

தொகுப்பு அனுஷா