(கே.லாவண்யா)

2018 ஆம் ஆண்டுக்கான வரி வருவாயாக 792 பில்லியன் ரூபாவினை ஈட்டுவதற்கு உள்நாட்டு இறைவரித் திணைக்களம் எதிர்பார்த்துள்ளது.

இது தொடர்பாக இறைவரித் திணைக்கள் ஆளுநர் தெரிவிக்கையில்,

2017 ஆம் ஆண்டு இறைவரித் திணைக்களத்தினால் வரி வருமானமாக 602 பில்லியன் ரூபா ஈட்டப்பட்டது. கடந்த வருடம் பெறப்பட்ட வரி வருமானத்தை விட இவ்வருடம் 190 பில்லியன் ரூபா அதிகமாக வருமானமாக ஈட்ட எதிர்பார்த்துள்ளோம்.

இலங்கையில் தற்போது 1.6 மில்லியன் மக்கள் மீது வருமானவரி செலுத்துவதற்கு  பதிவுசெய்யப்பட்டள்ளது. புதிய இறைவரித் திணைக்கள செயற்பாடு அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் இறைவரித் திணைக்களத்தினால் புதிதாக 80,000 பேர் பதிவுசெய்யப்பட்டுள்ளனர்.

மேலும் 2020 ஆம் ஆண்டில் வருமான வரி செலுத்துவோரினது எண்ணிக்கை 3 மில்லியனாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.