அப்­புத்­தளை, தொட்­டு­லா­கலை பகு­தியில் உள்­ளக விமான நிலையம் ஒன்­றினை அமைப்­ப­தற்­கான நட­வ­டிக்­கை­யினை மேற்­கொண்­டுள்­ள­தாக போக்­கு­வ­ரத்து மற்றும் சிவில் விமான சேவை அமைச்சர் நிமால் ஸ்ரீபால டி சில்வா தெரி­வித்தார்.

700 மில்­லியன் ரூபா செலவில் அமைக்­கப்­ப­ட­வி­ருக்கும் விமான நிலை­யத்­திற்­கான காணி­யினை அமைச்சர் நேரில் சென்று பார்­வை­யிட்­ட­துடன் இதற்­கான சாத்­திய வள அறிக்­கை­யினை மேற்­கொள்ள சிவில் விமான சேவைகள் அதி­கார சபை நட­வ­டிக்கை எடுத்­துள்­ளது எனவும் குறிப்­பிட்டார்.

வெளி­நாட்டு மற்றும் உள்­நாட்டு சுற்­றுலா பய­ணி­களை கவரும் வகையில் இது போன்று பல்­வேறு பிர­தே­சங்­களில் மூன்று உள்­ளக விமான நிலை­யங்­களை அமைக்க உத்­தே­சித்­தி­ருப்­ப­தா­கவும் அவர் மேலும் குறிப்­பிட்டார். எல்ல, பண்­டா­ர­வளை, நுவ­ரெ­லியா, பதுளை, தியத்­த­லாவை போன்ற பிர­தே­சங்­க­ளுக்கு சுற்­றுலா செல்லும் பய­ணி­களை இலக்கு வைத்து இங்கு விமான நிலையம் அமைக்க திட்­ட­மி­டப்­பட்­டுள்­ளது. 1.2 கி.மீற்றர் நீளமும் 75 மீற்றர் அக­லமும் கொண்­ட­தாக விமான ஓடு பாதை அமைக்­கப்­ப­ட­வுள்­ளது.

உள்­நாட்டு மற்றும் வெளி­நாட்டு சுற்­றுலாப் பய­ணிகள் பிர­தான வீதி­க­ளி­னூ­டாக செல்­வதை விட குறைந்த நேரத்தில் இலகு ரக விமானங்கள் மூலம் விரைவாக பயணங்களை மேற்கொள்ள முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.