பெண் ஒருவரை அச்சுறுத்தி தாக்கியமைக்காக கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றில் சரணடைந்த கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகமவின் மனைவி, மகள் இருவரையும் சரீரப் பிணையில் செல்ல நீதிவான் அனுமதி வழங்கியுள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை கொழும்பு மேல் நீதிவான் லங்கா ஜயரத்ன குறித்த இருவரையும் நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு கருவாத்தோட்ட பொலிஸாருக்கு உத்தரவிட்டிருந்தார்.

இதற்கமைய இன்று பிரதான நீதிமன்றில் சரணடைந்த இருவருக்கும் தலா ஒரு இலட்சம் ரூபா சரீரப்பிணையின் கீழ் செல்ல நீதிவான் அனுமதி வழங்கியிருந்தார்.