எதிர்வரும் 14 ஆம் திகதி பிபா உலகக் கிண்ண கால்பந்தாட்டத் தொடர் ரஷ்யாவில் ஆரம்பமாகவுள்ளது.

11 நகரங்களில் 12 மைதானங்களில் 32 நாடுகள் பங்கேற்கும் இத் தொடரில் மொத்தம் 64 போட்டிகள் நடைபெறவுள்ளன. முதல் போட்டியில் தொடரை நடத்தும் ரஷ்ய அணி, சவூதி அரேபியாவை சந்திக்கிறது. 

இந் நிலையில் இப் ‍போட்டியின் போது பயன்படுத்தப்படும் பந்தை சர்வதேச விண்வெளி மையத்துக்கு எடுத்து சென்று புவியீர்ப்பு இல்லாத (ஸீரோ கிராவிட்டி) அங்கு ரஷ்ய விண்வெளி வீரர்களான அன்டன் ஷபலெரோவ், அலெக் அர்டம்யெவ் இணைந்து இப் பந்தை பயன்படுத்தி கால்பந்து விளையாடி மகிழ்ந்தனர். 

இதன்போது இருவரும் ரஷ்ய அணியின் ஜெர்சி அணிந்திருந்தனர். இந்த பந்து சோயுஸ் எம்.எஸ்.07 விண்கலம் மூலம் பூமிக்கு திரும்பவுள்ளது.