
குடாநாட்டில் நெல் அறுவடையும் மரக்கறி சீசனும் ஆரம்பமானதைத் தொடர்ந்து இவற்றின் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இந்த விலை வீழ்ச்சி நடுத்தர மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில மாதங்களாக 70 ரூபாவிலிருந்து 80 ரூபாவரை விற்பனை செய்யப்பட்டு வந்த நாட்டரிசி தற்பொழுது 60 ரூபாவிலிருந்து 70 ரூபா வரை விற்பனையாகிறது.
இதேவேளை, அரிசிமாவின் விலையிலும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. கோடை காலம் ஆரம்பமானதை தொடர்ந்து மரக்கறி சீசனும் ஆரம்பமாகியுள்ளது.
ஒரு கிலோ 400 ரூபா வரை விற்கப்பட்டு வந்த கத்தரிக்காய், பயற்றங்காய், பாகற்காய் உட்பட பல மரக்கறி வகைகள் தற்பொழுது 100 ரூபாவிலிருந்து 200 ரூபா வரை விற்பனையாகின்றது.
50 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டு வந்த ஒரு பிடி கீரை தற்பொழுது 20 ரூபாவாக வீழ்ச்சி அடைந்துள்ளது.
முருங்கைக்காயைக் காண்பது மிக அரிதாக இருப்பதனால் முருங்கைக்காய் கிலோ 1000 ரூபாவாக விற்பனையாகின்றது.