மோட்டார் வாகன சந்­தையில் வாகன விற்­ப­னை­யா­னது உல­க­ளா­விய ரீதியில்  வீழ்ச்­சி­ய­டைந்­துள்­ள­தாக மோட்டார் வாகன உற்­பத்­தி­யா­ளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கடந்த 2017 ஆம் வருடம் பெப்­ர­வரி மாதம் தொடக்கம் இவ்­வாண்டு பெப்­ர­வரி மாதம் வரை­யி­லான காலப்­ப­கு­தியில் மேற்­கொள்­ளப்­பட்ட ஆய்வின் அடிப்­ப­டை­யி­லேயே இவ் அறிக்கை தயா­ரிக்­கப்­பட்­டுள்­ள­தாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த ஆய்­வின்­படி உல­க­ளா­விய ரீதியில் வாகன விற்­பனை பாரியளவில் வீழ்ச்­சி­ய­டைந்­துள்­ள­தாக சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது. மோட்டார் வாக­னங்கள் அதி­க­மாக விற்­ப­னை­யான ஆசிய வலயத்திலும் ஐரோப்­பிய வல­யத்­திலும் வாகன சந்­தையில் பாரிய பின்­ன­டைவு ஏற்­பட்டுள்­ள­தாக இந்த ஆய்வை மேற்கொண்டவர்கள் தெரி­வித்­துள்­ளனர். 

அந்த வல­யங்­களிலுள்ள சில நாடு­களின் அர­சாங்­கங்கள் திறை­சே­ரியினூடாக மோட்டார் வாக­னங்கள் கொள்­வ­னவு செய்­வ­தற்­காக வழங்­கப்­பட்ட வச­திகள் நிறுத்­தப்­பட்­டமை, வேலை­யில்லாப் பிரச்­சினை உயர்­வ­டைந்­துள்­ளமை, வர்த்­தகத்துறை­களில் ஏற்­பட்­டுள்ள வீழ்ச்சி மற்றும் கொள்­வ­ன­வா­ளர்­களின் பொரு­ளா­தாரச் சரிவு போன்ற கார­ணங்­களாலேயே வாகனச் சந்­தையில் இந் நிலைமை ஏற்­பட்­டுள்­ள­தாக அந்த ஆய்­வ­றிக்­கையில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

இதே­வேளை அமெ­ரிக்க, ஆசிய மற்றும் தெற்­கா­சிய வல­யங்­களில் இந் நிலை வளர்ந்து வரு­வ­தா­கவும் அந்த ஆய்­வ­றிக்­கையில் சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது. சில ஐரோப்­பிய நாடு­களில் சுற்­றா­ட­லுக்கு உகந்த வாக­னங்­களைப் பாவிக்குமாறு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கைகளும் வாகன சந்தையில் வாகன விற்பனை வீழ்ச்சிக்கு காரணம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.