கட்டாரில் தொழில்புரியும் வெளிநாட்டுப் பணியாளர்களுக்குரித்தான தொழில் சட்டங்களில் மாற்றங்களைக் கொண்டு வருவதற்கு அந்நாட்டின் நிர்வாக அபிவிருத்தித் தொழிலாளர் மற்றும் சமூக நலன்புரி செயற்பாடுகளுக்கான அமைச்சு தீர்மானித்துள்ளது.
அந்தத் தீர்மானத்துக்கமைய அந்நாட்டு அதிகாரிகள் புதிய சட்டதிட்டங்கள் தயாரிக்கப்பட வேண்டிய முறையைப் பற்றிக் கலந்துரையாடியுள்ளதாகவும் அதன்போது சில முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதுடன் அந்த முடிவுகளை அனுமதிப்பதற்கான நடவடிக்கைகள் எடுத்துள்ளதாகவும் அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
அத் தீர்மானங்களுக்கமைய அந்நாடுகளில் பணிபுரியும் பணியாளர்கள் நாள் ஒன்றுக்கு பணிபுரிய வேண்டிய மணித்தியாலங்கள், மருத்துவ விடுமுறை பெறும் முறை, விடுமுறை தினங்கள் போன்றவை தொடர்பிலும் கவனம் செலுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
புதிய சட்டத்திருத்தங்களுக்கமைய பணியாளர் ஒருவர் நாள் ஒன்றுக்கு குறித்த நிறுவனங்களில் 10 மணித்தியாலங்கள் பணிபுரிய வேண்டும் என்பதுடன் கிழமையில் ஒருநாள் விடுமுறை பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு அவர்களுக்கு உள்ளடக்கப்பட்டுள்ளதுடன் மருத்துவ விடுமுறையினை தமது சுகயீனம் தொடர்பான உறுதிப்படுத்தலுடன் பெற்றுக்கொள்ள முடியுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இனிவரும் காலங்களில் கட்டார் நாட்டுக்கு தொழில் நிமித்தம் வரும் பணியாளர்கள் அந்நாட்டின் தொழில் சட்டங்கள் குறித்து கட்டாயம் அறிந்து கொள்ள வேண்டுமெனவும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளதுடன் நாட்டின் தொழில் சட்டங்களை மீறுவோருக்கெதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM