இத்தாலியின் தீவிர வலதுசாரிக் கட்சியைச் சேர்ந்த புதிய உள்துறை அமைச்சரான மற்றியோ சால்வினி,  நாட்டை விட்டு வெளியேறுவதற்கு தயாராகுமாறு குடியேற்றவாசிகளுக்கு எச்சரிக்கை வடுத்துள்ளார்.

"உங்கள் இலவச சவாரி முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இது நீங்கள் (நாட்டை விட்டு வெளியேறுவதற்கு) உங்கள் பயணப் பொதிகளை தயார் செய்வதற்கான தருணம்" என அவர் கூறியுள்ளார்.

மாத இறுதியில் இடம்பெறவுள்ள நகர சபைத் தேர்தலில் தனது தீவிர வலதுசாரி லீக் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர் ஒருவருக்கு ஆதரவளிக்கும் வகையில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேய அவர் மேற்கண்டவாறு கூறினார்.