(எம்.ஆர்.எம்.வஸீம்)
புதிய அரசியலமைப்பை அரசாங்கம் கொண்டுவரத் தவறியதாலேயே நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை இல்லாமலாக்கும் 20 ஆவது திருத்தத்தை நாங்கள் கொண்டுவந்தோம். நிறைவேற்று ஜனாதிபதி முறைமை இருக்கும் நிலையில் கோத்தபாய ராஜபக்ஷவை மக்கள் ஜனாதிபதியாக தெரிவுசெய்தால் முழு நாடும் கண்ணீர் வடிக்கவேண்டிய நிலை ஏற்படும் என பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்னெத்தி தெரிவித்தார்.
மக்கள் விடுதலை முன்னணி பாராளுமன்றத்தில் முன்வைத்திருக்கும் அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தம் தொடர்பாக நேற்று கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
அரசாங்கம் அதிகாரத்துக்கு வரும்போது, புதிய அரசியலமைப்பு ஏற்படுத்துவதாகவும் அதனூடாக நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை இல்லாமலாக்குவதாகவும் மக்களுக்கு வாக்குறுதி அளித்திருந்தது. என்றாலும் கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலின் பின்னர் புதிய அரசியலமைப்பு தொடர்பான எந்த கலந்துரையாடல்களும் இடம்பெறவில்லை. அதனால்தான் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை இல்லாமலாக்கும் நோக்கத்துடன் 20ஆவது திருத்தத்தை நாங்கள் கொண்டுவந்தோம்.
அத்துடன் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை இல்லாமலாக்குவதாகவே அதிகாரத்துக்கு வந்த அனைத்து ஜனாதிபதிகளும் தெரிவித்திருந்தனர். ஆனால் இடம்பெறவில்லை. அதனால்தான் தொடர்ந்தும் அடுத்த ஜனாதிபதி தேர்தல்வரைக்கும் இதனை வைத்துக்கொண்டிருக்காமல் அடுத்த ஜனாதிபதியாக வரக்கூடியவர் நிறைவேற்று அதிகாரம் இல்லாதவராக தெரிவுசெய்யப்படவேணடும் என நாங்கள் முயற்சிக்கின்றோம்.
அத்துடன் தற்போதை ஜனாதிபதியின் நடவடிக்கைகள் தொடர்பில் பலரும் விமர்சனங்களை தெரிவித்து நாட்டுக்கு உறுதியான, அச்சமின்றி தீர்மானம் எடுக்கவேண்டிய தலைவர் ஒருவர் அவசியம் என தெரிவிக்கின்றனர். அதற்காக நிறைவேற்று அதிகாரம் இருக்கவேண்டும் என்று தெரிவிக்கக்கூடியவர்களும் இருக்கின்றனர். இவ்வாறான கருத்து நாட்டுக்குள் இருக்கும் நிலையில் தற்போது அடுத்த ஜனாதிபதி தேர்தலில் கோத்தபாய ராஜபக்ஷ்வை நியமிக்கவேண்டும் என்ற கருத்தும் தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறான நிலையில் நிறைவேற்று ஜனாதிபதிமுறை இருக்கும் நிலையில் மக்கள் கோத்தபாய ராஜபக்ஷ்வை ஜனாதிபதியாக தெரிவுசெய்தால் நாட்டுமக்கள் அனைவரும் கண்ணீர் வடிக்க வேண்டிய நிலையே ஏற்படும்.
மேலும் நாங்கள் முன்வைத்துள்ள 20ஆம் திருத்தம் நாட்டை பிரிக்கக்கூடியது, ரணில் விக்ரமசிங்கவுக்கு அதிகாரத்தை வழங்கும் நோக்கத்தில் கொண்டுவரப்பட்டுள்ளது. மற்றும் 13ஆம் திருத்தத்தில் ஜனாதிபதிக்கு இருக்கும் அதிகாரத்தை இல்லாமலாக்கிவிடும் என்று சிலர் தெரிவித்து வருகின்றனர்.
ஆனால் அவ்வாறான எந்த விடயமும் இதில் உள்வாங்கப்படவிலிலை. மாறாக பாராளுமன்ற உறுப்பினர்கள் விலைபோகாமல் கட்சி மாறுவதை தடுத்துள்ளோம். ஜனாதிபதியின் பொது மன்னிப்பில் கைதிகள் விடுதலை செய்யப்படுவது, ஜனாதிபதி கட்சி சார்பற்றவராக இருப்பது மற்றும் பாராளுமன்ற அமர்வுகளை ஒத்திவைக்கும் அதிகாரம் இல்லாமலாக்குதல் போன்ற விடயங்களே உள்வாங்கப்பட்டிருக்கின்றன. இதில் யாருக்கும் பாதிப்பு ஏற்படப்போவதில்லை என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM