ஐக்கியதேசிய கட்சியுடன் அரசியல்கூட்டணி வைத்துக்கொண்டதன் காரணமாகவே  ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உள்ளுராட்சி தேர்தல்களில் தோல்வியை சந்தித்தது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மத்திய குழு கூட்டத்திலேயே சிறிசேன இதனை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அனைவரும் சிந்திக்கவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அனைத்து கட்சிகளும் உட்கட்சிமோதல்களால் பாதிக்கப்பட்டுள்ளன எனவும் சிறிசேன தெரிவித்துள்ளார்.

எந்த கட்சியும் உள்கட்சி மோதலால் பாதிக்கப்படவில்லை என எவரும் தெரிவிக்க முடியாது எனவும்தெரிவித்துள்ள சிறிசேன ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும் அதன் ஆரம்பகாலத்திலிருந்து இதன்காரணமாக  பாதிக்கப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.