கொழும்பு 7, விஜேராம வீதியில் அமைந்துள்ள முன்னாள் அமைச்சர் ஜகத் புஷ்பகுமாரவின் வீட்டில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டதாகவும் தீ தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும், வீட்டு சாரதியின் அறையில் ஏற்பட்ட குறித்த தீ விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை. 

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.