இன்று 95 ஆவது பிறந்த தின நிகழ்வை கொண்டாடும் இந்தியாவின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான மு.கருணாநிதிக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில் பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் ''தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். அவர் சிறந்த எழுத்தாளர், கவிஞர், சிந்தனையாளர், பேச்சாளர். இந்தியாவின் மிக மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரான கருணாநிதி ஆரோக்கியமான உடல்நலத்துடன் நீண்ட காலம் வாழ வாழ்த்துகள்'' என பதிவிட்டுள்ளார்.