(ஆர்.யசி)

ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின்  நிரு­வாகக் குழு மாற்­றப்­பட  வேண்டும் என்ற  சர்ச்­சைகள் எழுந்­துள்ள நிலை­யிலும், தேசிய அர­சாங்­கத்தை விட்டு வெளி­யேற தொடர்ச்­சி­யாக அழுத்தம் கொடுத்து வரும் நிலை­யிலும் ஜனா­தி­பதி தலை­மையில் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் விசேட மத்­தி­ய­குழுக் கூட்டம் இன்று கூடு­கின்­றது. 

செயற்­குழு, நிறை­வேற்றுக் குழு கூட்­டமும் இன்­றைய தினமே கூடு­வ­துடன்  தற்­கா­லிக புதிய  நிரு­வாகக் குழு இன்று நிய­மிக்­கப்­ப­டு­கின்­ற­மையும் குறிப்­பி­டத்­தக்­கது. 

ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சிக்குள் பிள­வுகள், நெருக்­க­டிகள் தொடர்ந்­து­கொண்­டுள்ள நிலையில் கட்­சியின் மறு­சீ­ர­மைப்பு மற்றும் தற்­கா­லிக நிரு­வாகக் குழு மாற்­றங்கள் ஏற்­பட வேண்டும் என வலி­யு­றுத்­தப்­பட்டு வரு­கின்­றது. 

அதேபோல் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் பொதுச் செய­லாளர், ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் பொதுச்­செ­ய­லாளர் பத­விகள் மாற்­றப்­பட வேண்டும் எனவும் கட்­சிக்குள் அழுத்தம் கொடுக்­கப்­பட்டு வரு­கின்­றது. 

ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் சுயா­தீனக் குழு­வாக செயற்­படும் 16 உறுப்­பி­னர்கள் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியை தேசிய அர­சாங்­கத்தில் இருந்து வெளி­யேற்றி எதிர்க்­கட்­சி­யாக செயற்­பட அழுத்தம் கொடுத்து வரு­கின்ற  நிலையில் மிக முக்­கிய மத்­திய குழுக் கூட்டம் இன்று இரவு 7 மணிக்கு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மையில் அவ­ரது உத்­தி­யோ­க­பூர்வ இல்­லத்தில் கூடு­கின்­றது. அதேபோல் அகில இலங்கை செயற்­குழுக் கூட்­டமும், கட்­சியின் நிறை­வேற்றுக் குழுக் கூட்­டமும் இன்­றைய தினமே கூடி முக்­கிய தீர்­மா­னங்­களை எடுக்­க­வுள்­ளமை குறிப்பிடத்தக்கது.