கேரளத்தில் வேகமாக பரவி வரும் நிபா வைரஸ் காரணமாக பலாச்சேரியில் உள்ள மாவட்ட வைத்தியசாலையின் வைத்தியர்கள் மற்றும் தாதியர்களை விடுமுறையில் செல்லுமாறு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நிபா வைரஸ். வௌவாலில் இருந்து பரவுகிறது. அந்த உயிரினம் அமர்ந்த பழத்தை மனிதர்கள் உண்ணும் போது அவர்களுக்கு பரவுகிறது. குறித்த வைரஸ் காய்ச்சல் காரணமாக கேரள மாநிலத்தில் இதுவரை 16 பேர் உயிரிழந்துள்ளனர்.
பலாச்சேரி வைத்தியசாலையில் நிபா வைரஸால் பாதிக்கப்பட்ட இருவர் அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததையடுத்து பாதுகாப்பு அம்சங்களுக்காக நிபா வைரஸ் பாதிப்பு நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வரும் 4 வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களை விடுமுறையில் செல்லுமாறு சுகாதார துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
நிபா வைரஸ் குறித்து மாவட்டத்தில் உள்ள நிலை குறித்து கோழிக்கோடு மாவட்ட ஆட்சியர் யூவி ஜோஸ் கேரளா நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யவுள்ளார்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோழிக்கோடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களில் கோடை விடுமுறைக்கு பின் பாடசாலைகள் இன்று திறக்கப்படவில்லை. குறித்த பாடசாலைகள் ஜூன் 5-ஆம் திகதி திறக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM