விசுவமடு கல்லாறுக் கிராமத்திற்கான குடிநீர் விநியோகம் இன்று பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ சி.சிறீதரன்  அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

பல ஆண்டுகளாக குடிநீருக்கான தட்டுப்பாடு நிலவி வந்த விசுவமடு கல்லாறு கிராமத்தைச் சேர்ந்த 250 குடும்பங்களினுடைய குடிநீர் தேவையை  பூர்த்தி செய்யும் வகையில் மாகாணசபையின் குறித்தொகுக்கப்பட்ட 8 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் கரைச்சிப் பிரதேச சபையின் கண்காணிப்பின் கீழ் இந்த குடிநீர் வழங்கலுக்கான வேலைத் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டு நிறைவு செய்யப்பட்டிருந்த நிலையில் இன்று பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் அவர்களால் இன்றைய தினம் கையளிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், கரைச்சி பிரதேச சபையினுடைய தவிசாளர்

 அ.வேழமாலிகிதன் மற்றும் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளர்  சு.சுரேன்,  பிரதேச சபையினுடைய  உறுப்பினர்கள், மற்றும் அரச அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.