முதன்முதலாக மூன்று வித்தியாசமான வேடங்களில் சூர்யா நடித்துள்ள '24' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து 'போஸ்ட் புரடொக் ஷன்ஸ்' பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் சூ்ர்யா மற்றும் நித்யாமேனன் நடித்த கெரக்டர் குறித்து ஒரு தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

மூன்று வேடங்களில் சூர்யா நடித்துள்ள இந்த படத்தில் ஒரு வேடத்தில் 'வாரணம் ஆயிரம்' தந்தை சூர்யா போன்ற ஒரு கெரக்டர் அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், இந்த படத்தின் முக்கிய கெரக்டர் ஒன்றில் நடித்துள்ள நித்யாமேனன் பார்வையற்ற இளம்பெணாக நடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த தகவலை உறுதிப்படுத்தும் வகையில் இறுதியாக வெளியான இந்த படத்தின் 'போஸ்டர்' விளக்குகிறது.

ஒஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கும் இந்த படத்தில் சூர்யா, சமந்தா, நித்யாமேனன், சுரபி, அஜய், சத்யன், சரண்யா பொன்வண்ணன் உள்பட பலர் நடித்துள்ளார். விக்ரம்குமார் இயக்கியுள்ள இந்த படத்தை சூர்யாவின் 2D நிறுவனம் தயாரித்துள்ளது.