வெலிகந்த- போ அத்த பகுதியில் நபரொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். 

போ அத்த எப்.சீ ஆற்றில் குளிக்க சென்ற நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

கண்டி - மெதவெல பகுதியை சேர்ந்த 59 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

சடலம் வெலிகந்த வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிகந்த பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.