(இரா­ஜ­துரை ஹஷான்)

நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி முறை­மையை இரத்துச் செய்ய வேண்டும் என்ற விட­யத்தை மாத்­திரம் முன்­னி­லைப்­ப­டுத்தி மக்கள் விடு­தலை முன்­ன­ணி­யினர்  சமர்ப்­பித்­துள்ள 20ஆவது அர­சிய­ல­மைப்பு திருத்தம் பாரிய தோல்­வி­ய­டையும் என  லங்கா சம­ச­மாஜ கட்­சியின் தலைவர் பேரா­சி­ரி­யர் திஸ்ஸ விதா­ரண  தெரி­வித்தார். 

 20ஆவது திருத்­தத்தில் நிறை­வேற்று ஜனா­தி­பதி முறை­மை­யினை இரத்து செய்­யப்­படவேண்டும் என்ற விட­யத்தில்  ஏற்றுக் கொள்ள கூடி­ய­தா­கவே உள்­ளது. இருப்­பினும் மக்கள் விடு­தலை முன்­ன­ணி­யினர் தேவை­யற்ற விட­யங்­க­ளினை 20ஆவது திருத்­தத்தின் ஊடாக  நிறை வேற்ற முனை­வது பொருத்­த­மற்­றது எனவும் அவர் தெரி­வித்தார்.

அவர் இது தொடர்பில் மேலும் குறிப்­பி­டு­கையில்.

மக்கள் விடுலை முன்­ன­ணி­யினர் பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பித்­துள்ள 20ஆவது திருத்தம் ஒரு போதும்  மூன்றில் இரண்டு பெரும்­பாண்மை ஆத­ர­வினை பெறாது. ஏனென்றால் அது தற்­போ­தைய அர­சியல் தேவை­களை பூரணபடுத்­து­வ­தாக அமை­யாது. தேவை­யற்ற விட­யங்­களை மாத்­தி­ரமே மக்கள் விடு­தலை முன்­ன­ணி­யினர் உள்­ள­டக்­கி­யுள்­ளனர்.

தற்­போது 20ஆவது திருத்தம் வாக்­கெ­டுப்பு வரு­வ­தற்கு முன்­னரே பல தரப்­பினர் தமது எதிர்ப்­பினை வெளிப்­ப­டுத்­தி­யுள்­ளனர். அதா­வது பொது­ஜன பெர­மு­னவின் 54 உறுப்­பி­னர்­களும், தேசிய  அர­சாங்­கத்திலிருந்து வெளி­யே­றிய 16 உறுப்­பி­னர்­களும் எதிர்ப்­பினை வெளிப்­ப­டுத்­தி­யுள்­ளனர். ஒரு போதும் மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் நோக்­கங்கள் நிறை­வே­றாது.

நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி முறை­மை­யினை இரத்து செய்ய வேண்டும் என்ற விட­யத்­தினை ஆரம்­பத்தில் லங்கா சம­ச­மாஜ கட்­சி­யி­னரே முன்­வைத்­தனர். இவ்­வி­டயம் தொடர்பில் அர­சாங்­கத்­திடம் தொடர்ந்து அழுத்­தங்­களை பிர­யோ­கித்து வந்­தது.

நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி  முறை­மை­யினை மாத்­திரம் இரத்து செய்ய வேண்டும் என்று குறிப்­பிட்டு  யோச­னை­களை முன்­வைத்­தி­ருந்தால்  ஆத­ரவு வழங்­கி­யி­ருக்­கலாம். ஆனால் மக்கள் விடு­தலை முன்­ன­ணி­யினர் இவ்­வி­ட­யத்தில்  பல பொருத்­த­மற்ற விட­யங்­களை மறை­மு­க­மாக நிறை­வேற்ற  சூழ்ச்­சி­களை பிர­யோ­கித்­துள்­ளது.

மக்கள் விடு­தலை முன்­ன­ணி­யினர்  எதிர்­கட்­சி­யினர் என்ற பத­வியில் இருந்துக் கொண்டு  அரசாங்கத்தின் பங்காளி யாகவே செயற்படுகின்றனர். தமிழ் தேசிய கூட்டமைப்பின் நோக்கங்களும் 20ஆவது திருத்தத்தில் மறைக்கப்பட்டுள்ளன. ஆகவே  மக்கள் விடுதலை முன்னணியினருக்கு ஒரு போதும் ஆதரவு வழங்க முடியாது என தெரிவித்தார்.