தேசியப் பிரச்சினைக்கு எம்மால் மட்டுமே தீர்வு வழங்க முடியும் - மஹிந்த ராஜபக்ஷ  

Published By: Daya

02 Jun, 2018 | 08:34 AM
image

(ரொபட் அன்டனி)

வடக்கு, கிழக்கு தேசிய பிரச்சினைக்கான அரசியல் தீர்வை எமது தரப்பினால் மட்டுமே வழங்க முடியும்.  அதிகாரப்பகிர்வை வலியுறுத்துகின்ற வாசுதேவநாணயக்கார,  ராஜா கொல்லுரே, திஸ்ஸவிதாரண போன்றோர் எமது தரப் பிலேயே இருக்கின்றனர் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்திருக்கின்றார்.

தேசிய பிரச்சினைக்கு தீர்வுகாண என்ன செய்யவேண்டும் என்பது தொடர்பான ஒரு கலந்துரையாடல் கூட்டு எதிரணியின் தலைவர்கள் மட்டத்தில் முன்னாள் ராஜபக்ஷவின் கொழும்பு இல்லத்தில் நடைபெற்றது.  இதில் கருத்து வெளியிடுகையி லேயே மஹிந்த ராஜபக்ஷ இதனைக் குறிப்பிட்டுள்ளார். 

அவர் அங்கு தொடர்ந்தும் குறிப்பிடுகையில், 

ஐக்கிய தேசியக்கட்சி அதிகாரப்பகிர்வை ஆதரிக்கவில்லை.  ரணில் விக்கிரமசிங்க மட்டும் அதிகாரப்பகிர்வை விரும் பினாலும்  ஐக்கிய தேசியக்கட்சியின்   அதிகமானோர் அதிகாரப்பகிர்வை விரும்பவில்லை.  எனவே ஐக்கிய தேசியக் கட்சி யினால் தேசியப் பிரச்சினைக்கு தீர்வு வழங்க முடியாது. ஆனால்  எமது தரப்பினால்  இந்த பிரச்சினைக்கு ஒரு முடிவை காண முடியும்.   

அதாவது  எமது தரப்பில்  அதிகாரப்பகிர்வை வலியுறுத்துகின்ற அதிகமான தலைவர்கள் இருக்கின்றனர். உதாரணமாக  திஸ்ஸ விதாரண, வாசுதேவ நாணயக்கார, ராஜா கொல்லுரே  போன்ற தலைவர்கள் எம்முடனேயே இருக்கின்றனர். 

எனவே எம்மால் மட்டுமே தேசிய பிரச்சினைக்கான தீர்வை முன்வைக்க முடியும். இதனை தனித்து  செய்யவும் முடியாது. எனது ஆட்சிக்காலத்தில் அபிவிருத்தி முக்கியத்துவம் கொடுத்தேன். குறிப்பாக முப்பது வருடகால யுத்தம் முடிவடைந்ததும் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை அபிவிருத்தி செய்வதையே நான் நோக்கமாக கொண்டிருந்தேன். 

அதனடிப்படையிலேயே வடக்கு, கிழக்கை நான் அபிவிருத்தி செய்தேன். ஆனால்  எம்மால் மட்டுமே தேசிய பிரச்சினைக்கு அரசியல் தீர்வை வழங்க முடியும் என்பது உண்மையாகும் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51