லக்னோ பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய உ.பி. துணை முதல் மந்திரி தினேஷ் சர்மா, உலகிலேயே முதல் டெஸ்ட் டியூப் குழந்தை சீதைதான் என தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் லக்னோ பல்கலைக்கழகத்தில் வடபிராந்திய போட்டிகளுக்கான தொடக்க விழா இன்று நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட மாநில துணை முதல் மந்திரி தினேஷ் சர்மா மாணவர்களிடம் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:
நமது இதிகாசங்களான மகாபாரதம் மற்றும் ராமாயணம் ஆகியவை நவீன அறிவியலுக்கு முன்னோடியாக விளங்கி வருகின்றன. இதிகாச காலங்களில் பயன்பட்ட புஷ்பக விமானங்களே இப்போதைய விமானங்களுக்கு முன்னோடியாக அமைந்தவை.திருதிராஷ்டிரன் மகாபாரத போரை ஞான திருஷ்டியில் கண்டு விளக்கிய விதமே இன்றைய நேரலை நிகழ்ச்சிக்கான முன்னோடியாகும்.

இப்போது கூகுள் என்ன செய்து வருகிறதோ, அதை இந்து மதத்தை சேர்ந்த நாரதர் ஏற்கனவே செய்து வந்துள்ளார்.
இதேபோல், உலகிலேயே முதல் டெஸ்ட் டியூப் குழந்தை சீதாதேவி தான் என்பதை மறுப்பதற்கில்லை என தெரிவித்துள்ளார்.
இவரது பேச்சு உ.பி.யில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது