தனது காதலி மற்றொருவரை காதலித்து தன்னை ஏமாற்றுவதை அறிந்து கொண்ட இளைஞரொருவர் அதனை நிரூபிப்பதற்கான தகவல்களைத் திரட்டி அந்தக்காதலிக்கு காதலர் தின பரிசாக வழங்கியுள்ளார்.

வெலன்டைன் தினத்தில் தனது காதலிக்கு விசேட பரிசு வழங்கப் போவதாகக் கூறிய அந்த இளைஞர், காதலியின் கண்களைக் கட்டி வீட்டின் மாடியிலுள்ள அறைக்கு அழைத்துச் சென்றார். ரோஜா இதழ்களால் அந்த அறை அலங்கரிக்கப்பட்டிருந்தது.

பின்னர் தனது காதலியின் கையில் காகித அட்டையொன்றைக் கொடுத்த இளைஞர், காதலியின் கண்களை திறந்துவிட்டார். அந்த அட்டையை விரித்துப் பார்த்த யுவதி அப் பரிசுப்பொருள் என்னவென்று யோசித்தார்.

மேற்படி யுவதிக்கும் அவரின் மற்றொரு காதலனுக்கும் இடையிலான கணினி மூல தொடர்பாடல்கள் அடங்கிய, “ஸ்கிறீன் ஷொட்”களின் பிரதிகளையே அந்த இளைஞர் தனது காதலிக்கு பரிசாக கொடுத்திருந்தார்.

அந்த யுவதியுடனான காதலை முறித்துக் கொள்வதாக கூறிய இளைஞர், இதன்போது பதிவுசெய்யப்பட்ட வீடியோவையும் இணையத்தில் வெளியிட்டுள்ளார்.