கொழும்பு கிறீன் பாத் பகுதியில் அமைந்துள்ள Koala காட்சியறை, பல புதிய தெரிவுகளை உள்ளடக்கி சமகால வாழ்க்கை முறைக்கு பொருத்தமான வகையில் மெருகேற்றம் செய்யப்பட்டு முதற்கட்டமாக, பெருந்திரளான உள்ளக வடிவமைப்பாளர்கள், கட்டடக் கலைஞர்கள் மற்றும் தெரிவு செய்யப்பட்ட வாடிக்கையாளர்கள் மத்தியில் மீளத் திறந்து வைக்கப்பட்டிருக்கிறது.

KOALA

நவீன வாழ்க்கை முறைக்கு பொருத்தமான தீர்வுகளை பெற்றுக் கொடுக்கும் வர்த்தக நாமம் எனும் வகையில், Koala நிறுவனம் கிறீன் பாத் பகுதியில் அமைந்துள்ள தனது காட்சியறையை உள்ளக அலங்காரம், ஒளியமைப்பு, பொருத்தும் இணைப்புகள், தளபாடங்கள் ஆகியவற்றை கொண்டு மெருகேற்றம் செய்து இவ்வாறு மீள திறந்து வைத்துள்ளது. 

இந்த அங்குரார்ப்பண நிகழ்வில் Koala நிறுவனத்தின் பிரதம செயற்பாட்டு அதிகாரி தியான் டெப் கருத்து தெரிவிக்கையில்,

“முதற்கட்டமாக நாம் விருந்தினர்கள் மத்தியில் எமது பிரத்தியேகமான தளபாடங்களையும் புதிய அலங்காரத் தெரிவுகளையும் பார்வையிடுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தியிருந்தோம். உயர் தரம் வாய்ந்த தளபாடங்கள் தொடர்பில் Koala தன்னகத்தே கொண்டுள்ள விசேட அறிவு மற்றும் இயலுமை தொடர்பில் விருந்தினர்களுக்கு விளக்கங்களை வழங்குவது எமது இலக்காக அமைந்திருந்தது. 

வசிப்பறை, உணவருந்தும் அறை மற்றும் படுக்கையறைகள் மற்றும் வெளிப்பகுதிகளுக்கான தளபாடங்கள் போன்றவற்றை காட்சிப்படுத்துவற்கு அவசியமான இடவசதிகளைக் கொண்டுள்ள Koala காட்சியறை, நிறுவனத்தின் சகல தயாரிப்புகளையும் ஒரே கூரையின் கீழ் பார்வையிடக்கூடிய வாய்ப்பை வாடிக்கையாளர்களுக்கு ஏற்படுத்தியுள்ளது. சகல தயாரிப்புகளையும் தாமே தெரிவு செய்து கொள்ளக்கூடிய வகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதுடன், அதில் பெருமளவான தயாரிப்புகள் வாடிக்கையாளர்களின் தேவைகள் மற்றும் கேள்விகளுக்கு பொருத்தமான வகையில் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. 

காட்சியறையை திறந்து வைக்கும் முதல் கட்டத்தின் போது, வீட்டுத்தளபாடங்களுக்கான மேல் விரிப்புகள், வெளிப்புற தளபாடங்கள், துருப்பிடிக்காத இரும்பினால் உற்பத்தி செய்யப்பட்ட பான்ட்ரி, வியாபாரங்களுக்கான உள்ளக தளபாடங்கள் மற்றும் வசிப்பறை, உணவருந்தும் அறை மற்றும் படுக்கையறை ஆகியவற்றுக்கு பொருத்தமான நவீன அங்கங்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.  

synonymous for its perfection, class and quality இல்லங்கள் மற்றும் உணவு மற்றும் பானத்துறைக்கு பொருத்தமான மேசை மீதான தீர்வுகள் பலவற்றையும் இந்த காட்சியறை காட்சிப்படுத்தியுள்ளது. ஸ்பெய்ன் நாட்டின் 100 ஆண்டுகளுக்கு மேல் பழமையான glassVicrila ® தயாரிப்புகள் மற்றும் 100 ஆண்டுகளுக்கு மேல் பழமையான அமெரிக்காவின் புகழ்பெற்ற Oneida ®  மற்றும் Sant’ Andrea ® தயாரிப்புகள் ஆகியவற்றின் ஏக விநியோகஸ்த்தராகவும் Koala திகழ்கிறது. 

Vicrila என்பது குறைந்தளவு உடைதல் தன்மையை கொண்டதுடன், முழுமையாக பதனிடப்பட்ட கண்ணாடி தயாரிப்புகளை உற்பத்தி செய்யும் உலகின் ஒரே உற்பத்தியாளராகவும் திகழ்கிறது. Koala இன் சொந்த flatware வர்த்தக நாமமான “Koala 18/10 stainless” என்பது 3 அலங்காரங்களில் இலங்கையில் அண்மையில் அறிமுகம் செய்யப்பட்டிருந்தது. Oneida மற்றும் Sant Andrea flatware அன்பளிப்பு பொதிகள் ஆகியன 24 அல்லது 32 துண்டுகளைக் கொண்ட அன்பளிப்பு பொதிகளில் அமைந்துள்ளன.

இவற்றை Vicrilla வின் கண்ணாடியாலான உள்ளகங்களைக் கொண்ட அன்பளிப்பு பொதிகளுடன் இணைக்கும் போது, எந்தவொரு நிகழ்வுக்கும் அன்பளிப்புச் செய்ய பொருத்தமான தெரிவாக அமைந்திருக்கும். Koala அண்மையில் அறிமுகம் செய்திருந்த London Sofa, Sofa No 1 மற்றும் Villa Sofa போன்ற தெரிவுகளுக்கு மேலாக, புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட 5 சோஃபாக் கட்டில்களும் இந்த காட்சியறையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. வெவ்வேறு மாதிரிகளுக்கு பொருத்தமான உள்ளம்சங்கள் பலதைக் கொண்டு உற்பத்தி செய்யப்பட்டுள்ள சோஃபா தெரிவுகள் கட்டடங்கள் மற்றும் இல்லங்களுக்கு மேலதிக அழகைச் சேர்க்கும் வகையில் அமைந்திருக்கும்.

“பாரம்பரிய அடிப்படையில் உற்பத்திகளை காட்சிப்படுத்துவதற்கு மேலாக, வாடிக்கையாளர்களுக்கு நிஜமான சூழலில் தமது விருப்பத்துக்கமைய தயாரிப்புகளை தெரிவு செய்து கொள்ளக்கூடிய வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பது இந்த காட்சியறையில் காணப்படும் விசேட அம்சமாகும். தரத்திலும், நீடித்த உழைப்பிலும் உயர்ந்த தன்மையைக் கொண்டதாக எமது தயாரிப்புகளை, நவீன வாழ்க்கை முறைக்கு பொருத்தமான வகையில் வாடிக்கையாளர்களுக்கு இவற்றை பெற்றுக் கொடுப்பது எமது நோக்கம்” என டெப் மேலும் குறிப்பிட்டார்.

தயாரிப்புகளை விற்பனை செய்வதில் எல்லைக்கு சென்று, தமது தீர்வுகளின் ஊடாக வாழ்க்கை முறைக்கு அலங்காரமூட்டும் இயலுமையை கொண்ட உள்ளக அலங்கார வல்லுநர்கள் மற்றும் அலங்கார நிறுவனங்கள், Koala உடன் கைகோர்த்துள்ளன. வியாபாரங்கள், இல்லங்கள், விருந்தோம்பல், களிப்பூட்டும் பகுதிகள் மற்றும் சுகாதார பிரிவுகளின் எந்தவொரு தேவைக்கும் பொருத்தமான சேவையை பெற்றுக் கொடுக்கும் வாய்ப்பு Koalaவிடம் காணப்படுகிறது. 

புத்தாக்கம் மற்றும் விசேடத்துவம் ஆகியவற்றுடன் தொடர்ச்சியாக அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் முழயடய நிறுவனம் இரு தசாப்தங்களுக்கு மேலாக, இந்நாட்டின் அலுவலக, சேவை வழங்குநர்கள் மற்றும் இல்லத்தளபாட தீர்வுகளைப் பெற்றுக் கொடுப்பதில் முன்னோடியாக திகழ்கிறது.