கிராம உத்தியோகத்தர்களுக்கான யாப்பு விரைவில்.....

Published By: L. Abhilashani

01 Jun, 2018 | 04:12 PM
image

(எம்.எம்.மின்ஹாஜ்)

"கிராம உத்தியோகத்தர்களை வழிநடத்தும் வகையில் அந்த சேவைக்கென யாப்பொன்று இல்லை. இதன்படி கிராம உத்தியோக சேவைக்கு அங்கீகாரம் வழங்கும் வகையில் கிராம உத்தியோகத்தர்களுக்கான யாப்பு விரைவில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும்" என உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.

புதிதாக கிராம உத்தியோகத்தர்கள் 1,650 பேருக்கு நியமனம் வழங்கும் நிகழ்வு நேற்று அலரி மாளிகையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அமைச்சர் வஜிர அபேவர்தன மேலும் உரையாற்றுகையில்,

"நாட்டின் அரச சேவையை நல்லாட்சி அரசாங்கத்தை போன்று வேறு எந்தவொரு அரசாங்கமும் பலப்படுத்தவில்லை. அரச ஊழியர்களுக்கான சம்பளத்தை அதிகரித்தோம். வேறு எந்த காலப்பகுதியிலும் அதிகரிக்கப்படாத அளவிற்கு அரச ஊழியர்களின் சம்பளத்தை பன்மடங்காக அதிகரித்தோம்.

இதன்படி கிராம உத்தியோகத்தர்களின் சம்பளம் 2020 ஆம் ஆண்டாகும் போது இன்னும் அதிகரிக்கும். இதன்படி மூன்றாம் நிலையில் உள்ளவர்களுக்கு 28,940 ரூபாவும், இரண்டாம் நிலையில் உள்ளவர்களுக்கு 32,290 ரூபாவும் முதலாம் நிலையில் உள்ளவர்களுக்கு 36,000 ரூபாவாகவும் அதிகரிக்கும்.

அத்துடன் கிராம உத்தியோகத்தர்களை வழிநடத்தும் வகையில் அந்த சேவைக்கு யாப்பொன்று இல்லை. இதன்படி கிராம உத்தியோக சேவைக்கு அங்கீகாரம் வழங்கும் வகையில் கிராம உத்தியோகத்தர்களுக்கான யாப்பு விரைவில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும். இந்த யாப்பு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டு அவரின் அனுமதி பெறப்பட்டதுடன் தற்போது அதனை நாம் தொழிற்சங்க பிரதிநிதிகளிடம் கையளித்துள்ளோம். இதன்படி விரைவில் அமைச்சரவையில் சமர்ப்பிப்போம்." என்றார்.

இந் நிகழ்வுக்கு அமைச்சர் ரீஷாத் பதியுதீன், இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம் பெளசி, பிரதி அமைச்சர் ஜே.சி அலவத்துவல உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ரூ.24 பில்லியன் நட்டத்தில் இருந்து இலாப...

2026-09-09 12:25:53
news-image

20 ஆண்டுகளாக நிலுவையிலிருந்த மலையக மக்களின்...

2026-09-09 17:35:50
news-image

மலையக மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள்...

2026-09-09 12:45:30
news-image

மலையக மக்களின் வீடு, காணி உள்ளிட்ட...

2026-09-09 17:31:26
news-image

ராஜபக்‌ஷ குடும்ப அரசியலுக்கு இனி மக்கள்...

2026-09-09 13:44:30
news-image

ராஜ்நாத் சிங் இலங்கை விஜயத்தில் கைச்சாத்திடப்பட்ட...

2026-09-09 17:30:07
news-image

மன்னார்–இராமேஸ்வரம் நேரடி பயணிகள் கப்பல் சேவையை...

2026-09-09 14:12:24
news-image

திருகோணமலை துறைமுகத்தில் உள்ள ஈரான் கப்பல்...

2026-09-09 17:02:51
news-image

பயங்கரவாதத் தடைச் சட்டம்: அரசாங்கத்தின் சர்வதேச...

2026-09-09 14:21:59
news-image

பெருந்தோட்டக் கம்பனிகளின் குத்தகை காலத்தை நீடிக்கும்...

2026-09-09 17:36:29
news-image

இந்திய கடற்படையின் பிரதிப் பிரதானி உத்தியோகபூர்வ...

2026-09-09 22:49:48
news-image

நாட்டில் அதிகரிக்கும் கொலைச் சம்பவங்கள்: தேசிய...

2026-09-09 14:52:24