வவுனியா குட்சைட் வீதியில் நேற்று அதிகாலை 2 மணியளவில் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்களினால் கடத்திச் செல்லப்பட்ட கைக்குழந்தை பாதுகாப்பாக உள்ளதாக வவுனியா பொலிசாருக்கு குறித்த குழந்தையின் தந்தை தொலைபேசி மூலம் தெரிவித்துள்ளதாக  குழந்தையின் உறவினர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இன்று காலை குறித்த குழந்தையின் பெற்றோரை பொலிஸ் நிலையத்திற்கு வருமாறு பொலிசாரால் அழைக்கப்பட்டுள்ளதாகவும்,.

நேற்று மாலை வெளிநாட்டிலுள்ள குழந்தையின் தந்தை வவுனியா பொலிசாருக்கு தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்தி கடத்திச் செல்லப்பட்ட கைக்குழந்தை பாதுகாப்பாகவுள்ளதாகவும். அதனை ஒப்படைப்பதற்கு தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

 இதையடுத்து இன்று காலை பொலிஸ் நிலையத்திற்குச் சென்ற கைக்குழந்தையின் தாயார் மற்றும் உறவினர்கள் கடத்திச் செல்லப்பட்ட கைக்குழந்தையின் வரவினை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.