தெற்காசியாவில் இலங்கைக்கு 2 ஆவது இடம் !

Published By: Digital Desk 7

01 Jun, 2018 | 02:41 PM
image

தெற்காசிய பிராந்தியத்தில் சிறுவர்கள் வாழக்கூடிய சிறப்பான நாடுகள் பட்டியலில் இலங்கை தொடர்ச்சியாக இரண்டாவது தடவையாகவும் இரண்டாவது இடத்தை தக்கவைத்துள்ளது.

இதேவேளை, உலக அளவில் சிறுவர்கள் வாழக்கூடிய சிறப்பான நாடுகள் பட்டியலில்  இலங்கை 60 ஆவது இடத்திலுள்ளதாக அறிக்கை ஒன்று சுட்டிக்காட்டுகிறது.

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு சேவ் த சில்ரன் அமைப்பு தொகுத்த பட்டியலில், பிராந்தியத்தின் ஏனைய நாடுகளை விட இலங்கை சிறப்பான நிலையில் இருக்கிறது. 

இந்தியா 113 ஆவது இடத்திலும், பங்களாதேஷ் 130 ஆவது இடத்திலும் பாகிஸ்தான் 149 ஆவது இடத்திலும் உள்ளன. 

இளம் பராய திருமணம், வளரிளம் பருவ கர்ப்பம், சிறுவர் மரண வீதம் முதலான காரணிகளின் அடிப்படையில் குறித்த பட்டியல் தொகுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கையில் வாழும் ஐந்து வயத்திற்குட்பட்ட பிள்ளைகளில் 17 சதவீதமானோர் வயதிற்கு ஏற்ற வளர்ச்சி இல்லாதவர்களாக காணப்படுகின்றனர். 

தொழிலுக்காக வெளிநாடு செல்லும் பெற்றோரின் பிள்ளைகள் மிகவும் ஓரங்கட்டப்பட்ட குழுவாக மாறியுள்ளார்கள் எனவும் சேவ் த சில்ரன் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

குளவி கொட்டுக்கு இலக்காகி 17 முன்பள்ளி...

2024-11-14 13:42:58
news-image

முதலாவது தேர்தல் முடிவு இரவு 10 ...

2024-11-14 13:35:09
news-image

அநுராதபுரத்தின் சில பகுதிகளில் 8 மணிநேர...

2024-11-14 13:28:31
news-image

கிளிநொச்சியில் மக்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பு

2024-11-14 13:31:43
news-image

பாராளுமன்றத் தேர்தல் 2024 : நண்பகல்...

2024-11-14 13:26:05
news-image

மன்னாரில் 6 தேர்தல் விதிமீறல் சம்பவங்கள்...

2024-11-14 13:05:52
news-image

யாழ்ப்பாணத்தில் சுமுகமாக நடைபெறும் வாக்களிப்பு

2024-11-14 13:08:46
news-image

வவுனியா நகர் எங்கும் வீசப்பட்டுள்ள கட்சி...

2024-11-14 12:46:59
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-11-14 12:47:24
news-image

திருகோணமலையில் சுமூகமாக நடைபெறும் வாக்களிப்பு

2024-11-14 12:13:23
news-image

வவுனியாவில் சுமூகமாக நடைபெறும் வாக்களிப்பு

2024-11-14 12:07:28
news-image

கொழும்பு வெள்ளவத்தையில் அமைதியான முறையில் மக்கள்...

2024-11-14 12:27:01