கண்ணீர்ப் புகைத் தாக்குதலை கண்டித்து இன்று மீண்டும் ஆர்ப்பாட்டங்கள்

Published By: Robert

21 Feb, 2016 | 09:38 AM
image

பொலிஸாரின் கண்ணீர்ப் புகைத் தாக்குதலை கண்டித்து இன்று மீண்டும் நாடு பூராகவும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடவுள்ளதாக வேலையில்லாப் பட்டதாரிகள் சங்கத்தினர் தெரிவித்தனர்.

வேலையில்லா பட்டதாரிகள் சங்கத்தினரால் கடந்த 16 ஆம் திகதி கொழும்பு புறக்கோட்டையில் பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. அதன்போது ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்கும் வகையில் பொலிஸாரினால் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரைப் பிரயோகத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

பொலிஸாரின் இந்த தாக்குதலை கண்டித்தே இன்றைய தினம் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு எதிராக அகில இலங்கை வேலையில்லாப் பட்டதாரிகள் சங்கத்தினரால் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 16 ஆம் திகதி வேலையில்லா பட்டதாரிகள் மேற்கொண்ட ஆர்ப்பாட்டத்தின் காரணமாக அன்றைய தினம் அதிக வாகன நெரிசல்; ஏற்பட்டு பொதுமக்களும் பயணிகளும் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

பொலிஸாரினால் ஏற்கனவே பெற்றுக் கொள்ளப்பட்ட நீதிமன்றத் தடை உத்தரவையும் மீறி அந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

பாலித தெவப்பெருமவின் பூத உடல் நல்லடக்கம்

2024-04-20 00:06:17