கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கப்பட இருந்த ஓமானின் - மஸ்கட் நகரில் இருந்து வந்த ஸ்ரீ லங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானமொன்று மத்தள விமான நிலையத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.

இன்று காலை காணப்பட்ட அதிக மழையுடன் கூடிய காலநிலை காரணமாகவே மேற்படி விமானம் திருப்பப்பட்டதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

அதிகாலை 4.45 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்க இருந்த குறித்த விமானம் அதிகாலை 5.20 மணிக்கு மத்தள விமான நிலையத்தில் 130 பயணிகளோடு தரையிறக்கப்பட்டுள்ளது.