தெரிவு செய்யப்பட்ட மாஸ்டர்ஸ் கற்கைகளுக்காக ஜனவரி மாதத்தில் புதிய உள்வாங்கல்கள், மார்ச் மற்றும் ஜூலை மாத மாணவர் இணைப்புகளுக்கு மேலாக நவம்பர் மாத இணைப்புகளையும் தொடர்கின்றமை மற்றும் மாணவர்களின் அதிகரித்துச் செல்லும் கேள்விகளை நிவர்த்தி செய்யும் வகையில் புலமைப்பரிசில்கள் போன்றவற்றை அவுஸ்திரேலியாவின் La Trobe பிஸ்னஸ் ஸ்கூல் இலங்கை மாணவர்களுக்கான புதிய அறிவித்தல்களை வெளியிட்டுள்ளது.

இலங்கையின் மாணவர்களுக்கு புதிய வாய்ப்புகளை பற்றி அறிவிக்கும் வகையில், La Trobe பிஸ்னஸ் கூலின் பீடாதிபதியும் தலைவருமான பேராசிரியர் ஜேன் ஹமில்டன் தலைமையிலான குழு, காத்மண்டு, இந்தியா மற்றும் இலங்கைக்கு விஜயமொன்றை மேற்கொண்டிருந்தது.

இலங்கையிலிருந்து அதிகளவான மாணவர்கள் La Trobe பிஸ்னஸ் கூலின் கற்கைகளில் ஈடுபாட்டை காண்பிக்கும் வகையில், ஜனவரியில், பட்டப் பின்படிப்பு வியாபார கற்கைகளை அறிமுகம் செய்திருந்தது. 

நவம்பர் மாதத்தின் பட்டமுன் படிப்பு மற்றும் பட்டப்பின்படிப்பு கற்கைகளை அறிமுகம் செய்திருந்தமைக்கு மேலதிகமாக இந்த கற்கை அறிமுகம் செய்யப்பட்டிருந்தது. நவம்பர் மாத மாணவர் சேர்ப்பு என்பது, பெப்ரவரி மற்றும் ஜுலை மாத கற்கைநெறிகளுக்கு மாணவர் சேர்ப்புக்கு மேலதிகமாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. La Trobe பிஸ்னஸ் ஸ்கூல், சில ஆண்டுகளுக்கு முன்னர் பட்டப் பின்படிப்பு கற்கைகளுக்கு மூன்றாம் செமிஸ்டர் கற்கைகளை அறிமுகம் செய்திருந்தது. இவை தற்போது இலங்கை மாணவர்கள் மத்தியில் புகழ்பெற்றுக் காணப்படுகின்றன. மேலும், துறையின் தேவைகளை நிவர்த்தி செய்யக்கூடிய வகையிலான புதிய பாடங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதுடன், தொழில் சந்தைக்கு பொருத்தமான வகையிலும் இவை அமைந்துள்ளன.

பேராசிரியர் ஜேன் ஹமில்டன் கருத்துத் தெரிவிக்கையில்,

“La Trobe பல்கலைக்கழகத்தினால் எமது பிராந்தியத்தில் காணப்படும் பிரதான நாடுகளுடன் கைகோர்க்க காண்பிக்கும் உறுதியான ஈடுபாடு மற்றும் மாணவர்களுக்கு தொடர்ச்சியான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கின்றமை போன்றன இலங்கைக்கு La Trobe பிஸ்னஸ் ஸ்கூலை மீள கொண்டு வருவதற்கு ஏதுவாக அமைந்திருந்தன. 

எமது புதிய ஜனவரி மாணவர் சேர்ப்புடன், ஒரு வருடத்தில் மூன்று மாணவர் சேர்ப்புகளை வழங்குகிறது. அத்துடன், இலங்கையின் திறமை வாய்ந்த மாணவர்களுக்கு தமது உயர் கல்வியை தொடர்வதற்கு புலமைப்பரிசில்களையும் வழங்குகிறது. La Trobe பிஸ்னஸ் ஸ்கூலில் புத்தம் புதிய வசதிகளுடன் மாணவர்களுக்கு அதிகளவு அனுகூலங்களை பெற்றுக் கொள்ளக்கூடிய வசதிகள் காணப்படுகின்றன.” என்றார்.

21 ஆம் நூற்றாண்டில் வியாபார சூழலுக்கு ஏற்ற வகையில் மாணவர்களை மாற்றியமைக்கும் வகையில் La Trobe பல்கலைக்கழகத்தின் MBA கற்கைகள் அமைந்துள்ளன. எமது கற்கைகளை EPAS அங்கிகரித்துள்ளதுடன் உலகின் முதல் தர சர்வதேச கற்கைநெறியாக CEO சஞ்சிகையும் ஏற்றுக் கொண்டுள்ளது.

நிறுவனமொன்றினுள் நிறுவனசார் பயிலல் திட்டமொன்றில் மாணவர்களுக்கு பங்கேற்பதற்கு வாய்ப்பளிக்கும் வகையில் இந்த கற்கை அமைந்துள்ளது.

“உலக பல்கலைக்கழங்கள் வரிசையில் சுமார் 200 இடங்கள் வரை La Trobe பல்கலைக்கழகம் முன்னேறியிருந்தது. உலகின் பல்கலைக்கழகங்கள் வரிசையில் 301 ஆவது இடத்தில் காணப்படுவதுடன் மூன்று உலகத் தரப்படுத்தல்களிலும் 400 ஆம் இடத்தினுள் இந்த பல்கலைக்கழகம் காணப்படுகின்றமை உறுதி செய்யப்பட்டுள்ளது” என பேராசிரியர் ஜேன் ஹமில்டன் மேலும் குறிப்பிட்டார்.

புதிய புலமைப்பரிசில்கள் குறித்து அறிவிப்பு

அவுஸ்திரேலியாவின் La Trobe பிஸ்னஸ் ஸ்கூல் மொத்த கல்வித்திட்டத்தின் பெறுமதியில் 15 முதல் 25 சதவீதம் வரையான புலமைப்பரிசில்களை வழங்க La Trobe அவுஸ்திரேலியா பல்கலைக்கழகம் முன்வந்துள்ளது. இந்த புலமைப்பரிசில்கள் தகைமை அடிப்படையில் வழங்கப்படும் என்பதுடன் தமது முன்னைய கல்விசார் நடவடிக்கைகளின் பெறுபேறுகளின் அடிப்படையில் மாணவர்கள் தெரிவு செய்யும் கற்கைகளுக்காக வழங்கப்படும். முன்னுரிமை அடிப்படையில் இந்த புலமைப்பரிசில் அமைந்திருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

புதிய பாடங்கள்

தொழில் சந்தையில் காணப்படும் மாற்றங்களுக்கமைய La Trobe பிஸ்னஸ் ஸ்கூலினால் புதிய பாடங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்த பாடங்களில், Big Ideas in Business மற்றும் Digital Business போன்றன அடங்கியுள்ளன. இவை இரண்டும் வியாபார இளமானி பட்டக்கற்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளன.